1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு , மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை துவங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போது முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது. அதற்குள் தகுதியான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற ஆரம்பித்துள்ளது
இன்று முதல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிருக்கு உரிமை தொகை வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக தமிழக்த்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கு முன்னதாக டோக்கன் வழங்கப்படும்.அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி நேரத்தில் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பங்களை பெற்று குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதனை திரும்ப அளிக்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தில் 100 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு தன்னார்வளர் என ஏராளமான தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சுகாதார அலுவலர் ஆகியோரை ஆட்சியர்கள் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.