ஒரு தேர்வு நீங்கள் யார் என்பதை சொல்லாது – மாணவர்களுக்கு அறிவுரை தரும் பிரதமர் மோடி!

ஒரு தேர்வு நீங்கள் யார் என்பதை சொல்லாது – மாணவர்களுக்கு அறிவுரை தரும் பிரதமர் மோடி!

இன்று வெளியாகியுள்ள பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த ஊக்க வார்த்தைகளை பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் காலை வெளியாகியது. தேர்வு முடிவுகள் குறித்து பதட்டப்பட்டு மாணவர்கள் பலர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி போர்டு தேர்வுகளை முடித்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு தேர்வு நாம் யார் என்பதை வரையறுக்காது. அதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் எதிர்கால வாழ்வில் இன்னும் சிறந்து உயர வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏராளமான திறமைகள் கொண்டவர்கள் முழுமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஒரு பொழுதும் நம்பிக்கை இழக்காமல் முன்னோக்கிச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த வெற்றி காத்திருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube