பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு.!!

இந்து கடவுளை இழுவுபடுத்தும் வகையில், பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் ‛மலக்குழு மரணம்’ என்ற தலைப்பில், பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி என்பவர்  கவிதை ஒன்றை வாசித்தார். அப்போது, அவர் வாசித்த அந்த கவிதையில்  கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை இழிவு படுத்தும் வகையில் இருந்துள்ளது.

இதற்கு சிலர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் தற்போது கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை சிகப்பி மீது பாரத் இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.