,

முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து..! 15 பேர் உயிரிழப்பு..!

By

truck hits bus

கனடாவில் முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மானிடோபாவின் தலைநகரான வின்னிபெக்கிற்கு மேற்கே உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு முன்னதாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் கார்பெரியில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பேருந்தில் சுமார் 25 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிருடன் இருப்பதாகவும், இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்களை நான் என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.