28 C
Chennai
Tuesday, December 1, 2020

“என்ன மன்னிச்சிடுங்க அண்ணா”.. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கூறிய வீடியோ வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிந்தது.

இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞரை இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர், கொரோனா பரவலால்வேலை இழந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தான் தவறாக பேசி விட்டதாக விஜய் சேதுபதியிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதானால் தன்னுடைய மகனது வாழ்க்கையே வீணாகும் என அழுதபடி அவரின் தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலமாக தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தநபர் அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest news

4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை...

#BREAKING : பேச்சுவார்த்தை முடிந்தது.. போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..!

விவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் ...

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.!

கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம்...

#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..!

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...

Related news