வெண்கலம் பதக்கம் வென்ற பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படம்.! நடிப்பது யார் தெரியுமா.!

பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக

By ragi | Published: Jun 03, 2020 10:38 AM

பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாகவும், பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அதில் மாதவன், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருப்பதாகவும், இதனை சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மல்லேஸ்வரியாக நடிக்க பிரபல ஹீரோயின்களான நயன்தாரா, திரிஷா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

Step2: Place in ads Display sections

unicc