கேரளாவில் கொரோனாவிலிருந்து பூரண நலம் பெற்ற 110 வயதான மூதாட்டி.!

கேரளாவில் கொரோனாவிலிருந்து பூரண நலம் பெற்ற 110 வயதான மூதாட்டி.!

கேரளாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 110 வயதான மூதாட்டி பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 110 வயதான ரந்தாதினி வரியாத் பத்து என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். மகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு நேற்றைய தினம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் கே. கே சைலஜா கூறுகையில், கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளுடன் தான் பத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது வயதினை கணக்கில் கொண்டு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்கு மூதாட்டி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 110 வயதான மூதாட்டி மீண்டது பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் மூதாட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் 14 நாட்கள் வீட்டில் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 105 வயதான மூதாட்டி மற்றும் 103 வயதான முதியவர் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube