கர்நாடகாவில் 105 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.!

105 வயதான பெண் கர்நாடகாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த 105 வயதான கமாலம்மா லிங்கனகவுடா ஹிரேகவுதர் என்ற மூதாட்டி சில நாட்களாக அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் காட்டிய பின்பு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் பின் சோதனை முடிவில் கொரோனா இருப்பது கடந்த வாரம் உறுதியானது.

அதன் பிறகு, தனது மகன் ஷங்கர் கவுடாவின் வீட்டில் சிகிச்சை பெற்ற வந்த நாளில் நேற்று இவர் குணமடைந்தார். இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள ஏராளமான வயதானவர்களின் உயிரை பறித்த பயங்கரமான கொரோனா வைரஸிலிருந்து மீண்ட மாநிலத்தின் மிகப் பழமையான நபர்களில் இவரும் ஒருவர்.