“புதிய தொலைத்தொடர்பு கொள்கை” மத்திய அரசு ஒப்புதல் ..!!
புதிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய எண்முறை தகவல்தொடர்புக் கொள்கை எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய தொலைத்தொடர்புக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையில் 7 1/4 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், 2022ஆம் ஆண்டுக்குள் 40இலட்சம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். 5ஜி சேவை, கண்ணாடி இழை வடங்கள் ஆகியவற்றின் வழியாக அதிவிரைவு இணையதள வசதியைக் குறைந்த விலையில் வழங்குவதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்தப் புதிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
DINASUVADU