“கன்னியஸ்திரியை கற்பழித்த” விவகாரம் பேராயர் பதவி பறிப்பு..!!நெருக்கடியில் பிராங்கோ..!!
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. பேராயருக்கு எதிரான புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை எனக்கோரி கேரள ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பேராயர் பிரான்கோ முலக்கல், ராஜினாமா செய்துள்ளார். பேராயருக்கு எதிரான புகார், வாட்டிகன் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரான்கோ முலக்கல் பதவி விலகியுள்ளார்.
DINASUVADU