குழந்தைகளுக்கு பிடித்த எக் மக்ரோனி அசத்தலான சுவையில் செய்வது எப்படி.?
அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- மக்ரோனி= 300 கிராம்
- எண்ணெய் =ஐந்து ஸ்பூன்
- முட்டை =2
- வெங்காயம்= ஒன்று
- முட்டைக்கோஸ் =ஒரு கைப்பிடி அளவு
- கேரட் =ஒன்று
- குடைமிளகாய்= சிறிதளவு
- நூடுல்ஸ் மசாலா =இரண்டு ஸ்பூன்
- கரம் மசாலா= ஒரு ஸ்பூன்
- இஞ்சி பூண்டு= பேஸ்ட் ஒரு ஸ்பூன்
- மிளகுத்தூள் =கால் ஸ்பூன்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு உப்பு மற்றும் மக்ரோனியை சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும் .பிறகு தண்ணீரை வடித்து விட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறி விடவும். பிறகு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, முட்டைக்கோஸ், கேரட் ,குடைமிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக சீவி சேர்த்து பத்து நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போன பின் மக்ரோனி சேர்த்து கலந்து விட்டு அதனுடன் நூடுல்ஸ் மசாலா, கரம் மசாலா ,மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும். இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் மக்ரோனி தயாராகிவிடும்.