ஃபெஞ்சல் புயலால் குவியும் மேகக்கூட்டங்கள்.! வானிலை ஆய்வு மையம் புதிய வீடியோ
ஃபெஞ்சல் புயல் காரணமாக குவிந்துள்ள மேக கூட்டங்களின் ரேடார் புகைப்படங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெஞ்சல் புயலானது மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 கிமீ முதல் 80 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களின் மேல் குவிந்துள்ள மேக கூட்டங்களை ரேடார் உதவியுடன் 3டி புகைப்படமாக எடுத்து அதனை சென்னை வானிலை ஆய்வு மையம் வீடியோவாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை ரேடாரில் ‘ஃபெயின்ஜல்’ புயல் மேக கூட்டங்களின் தற்போதைய 3D படம் pic.twitter.com/U14evcK7eU
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024