‘வந்துட்டேனு சொல்லு ..’வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!
இன்று மாலைக்குள் புயலாக உருவெடுக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஃபெங்கல் புயலானது உருவாகி இருக்கிறது.
சென்னை : கடந்த 2 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலாக உருவாகி இருக்கிறது. முன்னதாக, இன்று மாலைக்குள் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது.
மேலும், இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் முதல் கரையைக் கடக்க தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை பெய்யும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பரவலான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது நாளை பிற்பகல் பொழுதில் நகர்ந்து சென்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்கும் போது 70கி.மீ முதல் 90 கி.மீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.