வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!
வயநாட்டில் பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை தன்வசம் ஆக்கியுள்ளார்.
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபர் அலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியிலிருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது அதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார்.
அதேநேரம், அவரை எதிர்த்து எல்.டி.எஃப் கூட்டணி சார்பில் சத்தியன் மோகரியும், என் டி ஏ சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர். இந்த நிலையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
அதில் காலை முதலே பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று வருகிறார். தற்போது வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளார். இதன் மூலம் பிரியங்கா காந்தி வயநாட்டின் புதிய எம்பி பதவி ஏற்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் மற்றொரு சிறப்பம்சம் நிகழ்ந்து இருக்கிறது இது என்னவென்றால் ராகுல் காந்தி முன்னதாக நடைபெற்ற தேர்தலில் 3,64,42 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருந்தார். அதன்படி பார்க்கையில் பிரியங்கா காந்தி தற்போது 4,08,036 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.
இதனால், அவரும் 6,17,942 வாக்குகள் தற்போது வரை பெற்றுள்ளார். இதனால், இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கை வருவதற்கு முன்னரே அண்ணனை விஞ்சிய தங்கையாக ஒரு மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்த உள்ளார். இதனால், அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகின்றனர்.