ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?
கோப்ரி தொகுதியில் போட்டியிட்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது.
இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மிலிந்த் தியோரா 50,352 வாக்குகளுடன் முன்னிலை பெற்று வருகிறார். இது சிவசேனா கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்து வருகிறது. அதே போல மறுமுனையில் மற்றொரு முக்கிய தொகுதியான கோப்ரி – பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 96,736 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவரை எதிர்த்து சிவசேனா கட்சி சார்பாக போட்டியிட்ட கேதார் பிரகாஷ் திகே 70,733 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார். மகாராஷ்டிராவின் மற்ற தொகுதிகளில் பார்க்கையில், பாஜக 221 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மேலும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் பாஜக பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.