AUS vs IND : திருப்பி கொடுக்கும் இந்திய அணி! இங்கிருந்து வெற்றி பெற வாய்ப்புகள் என்னென்ன?
ஆஸி. அணியின் பந்து வீச்சை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சமாளித்து தடுமாற்றமின்றி விளையாடி வருகின்றனர்.
பெர்த் : ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சுக்கு மிக மோசமாக தடுமாறியது. அதிலும், பும்ராவின் அசத்தலான 5 விக்கெட் ஆஸ்திரேலிய அணியை உருக்குலைத்து. இதன் விளைவாக ஆஸ்திரேலிய அணி வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 46 முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பேட்டிங் தொடங்கியது. இந்த இன்னிங்க்ஸை பொறுப்புடன் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தொடக்கத்தில் நிதானத்துடன் விளையாட முடிவு செய்து தட்டி தட்டி விளையாடினார்கள்.
இதனால், எளிதில் ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான வேக பந்தை இந்திய அணி சமாளித்து விளையாடி வருகிறது. மேலும், இது இந்திய அணிக்கு ஒரு வெற்றியின் பாதையை போட்டிருக்கிறது என்றே கூறலாம். இந்திய அணி இங்கிருந்து வெற்றி பெறுவதற்கு இருக்கும் வாய்ப்பே பேட்டிங் தான்.
மேலும், போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணி தற்போது 130 ரன்கள் முன்னிலை பெற்று வருகிறது. அதாவது இந்திய அணி தற்போது, 84 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் விளையாடி வருகிறது. அதில், கே.எல்.ராகுல் 34 ரன்களும், ஜெய்ஸ்வால் 42 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணி, சிறப்பாக பேட்டிங் செய்து 4-ஆம் நாளில் 500 அல்லது 600 ரன்கள் முன்னிலை பெற்றால், கடைசி இரண்டு நாட்களில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் இந்திய அணியின் பவுலிங் படையால் சுருட்டி விடலாம். அதனால், இன்று மற்றும் நாளை நாள் முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.