மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்னரே மகாயுதி மற்றும் மகா விகாஸ் கூட்டணிக்குள் முதலமைச்சர் யார் என்ற பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டன.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை நோக்கி தான் இருக்கிறது.
இந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களத்தில் உள்ளன.
தற்போது தான் இப்போது தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கியுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே, அங்கு யார் முதலமைச்சர் என்ற போட்டிகள் எழத்தொடங்கிவிட்டன. மாகயுதி கூட்டணியில் பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தரப்பில் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் ஆகியோரிடையே கூட்டணிக்குள் போட்டி நிலவுகிறது.
அதேபோல , மகா விகாஸ் கூட்டணியில் சிவசேனா தரப்பில் உத்தவ் தாக்கரேவும், சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் அணியில் இருந்து ஜெயந்த் பாட்டிலுக்கும் இடையே முதலமைச்சர் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே கூட்டணிக்குகள் தனிதனி அணியாக தங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தால் முதலமைச்சர் கோரிக்கையை கூட்டணிக்குள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.