பெண்கள் மீது தாக்குதல்..!திமுக அனுமதிக்காது…!யாராக இருந்தாலும் தண்டனை..!!மு.க ஸ்டாலின் எச்சரிக்கை…!

Default Image

பெரம்பலூரில் பெண் மீதான தாக்குதல் நடத்திய கவுன்சிலர் போன்ற திமுக நிர்வாகிகளை திமுக அனுமதிக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார்.

பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது.என்றும் பெரம்பலூரில் பெண் மீதான தாக்குதல் குறித்து தெரிவித்த மு.க ஸ்டாலின் ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும், கட்சி விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை பெண்ணை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை அதிரடியாக திமுக தலைமை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்