மாதத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,040 ஆகவும், கிராமுக்கு ரூ.7,505 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : மாதத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், நேற்றும் இன்றும் சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.7,080க்கும், 1 சவரன் தங்கம் ரூ.120 சரிந்து, ரூ.56,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.30 குறைந்து ரூ.7,050க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.240 சரிந்து ரூ.56,400ஆக விற்கப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,040 ஆகவும், கிராமுக்கு ரூ.7,505 ஆகவும் விற்பனையாகிறது.
ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல்,தொடர்ந்து நான்காவது நாளாக கிராமுக்கு ரூ.101 க்கும், 1 கிலோவுக்கு ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.