கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..! கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?
சென்னை- கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களில் லட்டு மற்றும் அவல். இதை இரண்டையும் ஒன்றாக்கி அவல் லட்டாக செய்து கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம், அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- அவல் =இரண்டு கப்
- தேங்காய் துருவல்= கால் கப்
- வேர்க்கடலை=அரை கப்
- வெல்லம் =1. 1/2 கப்
- தண்ணீர்= அரை கப்
- ஏலக்காய்= 2
- நெய்= 4 ஸ்பூன்
- முந்திரி= தேவையான அளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் அவலை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும் .பிறகு அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு ,அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். இப்போது அவல் ,ஏலக்காய் மற்றும் வேர்க்கடலையை மிக்ஸியில் இரண்டு சுத்து விடவும் பிறகு அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து சேர்த்து அதனுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் அந்த வெல்லத் தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும் .பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அவல் பொடியையும் சேர்த்து கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறவும். இப்பொழுது சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து அதனுடன் சேர்த்து கலந்து மிதமான சூட்டிற்கு வந்த பிறகு லட்டாக பிடித்துக் கொள்ளவும். இப்போது கிருஷ்ணருக்கு பிடித்த தித்திப்பான லட்டு ரெடி..