பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி புதிய இலவச வீடுகள் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!
மத்திய பட்ஜெட் 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு இருக்கிறார்.
அதில் முக்கிய அறிவிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும்.
அதைப்போல, 1 கோடி நகர்ப்புற ஏழை குடும்பங்களின் வீட்டுவசதிக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நகர்புறம் மற்றும் வீட்டுவசதித் துறைக்கு ரூ.9.23 லட்சம் கோடி நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் நகர்புறம் மற்றும் வீட்டுவசதித் துறைக்கு ரூ.0.76 லட்சம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.