ஓமான் எண்ணெய் கப்பல் விபத்து ..! கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு ..!

Oman Oil Tanker Ship Accident

ஓமன் : கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு சென்றுள்ளது.

கடந்த ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்த அந்த டேங்கர் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த எண்ணெய் கப்பலில் 16 பேர் பயணித்து உள்ளனர் அதில் 13 பேர்கள் இந்தியர்கள் எனவும் மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த மீட்பு பணியில், இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக் (INS Teg) கப்பலும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் தற்போது வரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், காணாமல் போன எஞ்சிய பேரையும் தேடும் பணி தீவிரமாக இன்றும் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்