தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்ட ரிபப்ளிக் ..!

Default Image

மக்களவைத் தேர்தல்: இந்தியாவில் 7 கட்டங்களாக  மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று 7-வது கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி நிறுவனமான  Republic வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்தியாவில் பாஜக 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களில், மற்றவை 30 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் பாஜக கூட்டணி 48% ஓட்டுகளையும், காங்கிரஸ் 39% ஓட்டுகளையும், மற்றவை 13% ஓட்டுகளையும் கைகாட்டுவார்கள் என தெரிவித்துள்ளது.

Republic தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பாஜக 353 முதல் 368 இடங்களிலும், காங்கிரஸ் 118 முதல் 133 இடங்களிலும், மற்றவை 43 முதல் 48 இடங்களில் கைப்பற்றும் என கூறி இருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்