ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.!
தெலுங்கானா : ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ராமோஜி குழும நிறுவனங்களின் த லைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார. வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. தற்போது, அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் மு. க. ஸ்டாலின், ” பத்ம விபூஷன் திரு.ராமோஜி ராவ் காரு, அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ள ஸ்டாலின், இந்த துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
Deeply saddened by the passing away of Padma Vibhushan Thiru. Ramoji Rao garu, the visionary founder of the Ramoji Group. His remarkable contributions to media, journalism, and the film industry have left an everlasting legacy. My heartfelt condolences go out to his family,… pic.twitter.com/oedBtibWFx
— M.K.Stalin (@mkstalin) June 8, 2024
அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு
ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தற்போது டெல்லி சென்றுள்ள முதல்வர் ரேவந்த், இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் முதன்முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்த முன்னோடி ஒருவருக்கு, அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்தப் பெருமையை ராமோஜி ராவ் பெற்றுள்ளார்.