உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடை… அசத்தும் மாளவிகாவின் புது புது போட்டோஸ்…
சென்னை : நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார் என்றே கூறலாம். இந்த படத்துக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற படத்திலும் நடித்து இருந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட தவறியதே இல்லை என்று சொல்லலாம். இவருடைய புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மெல்லியமான உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் அழகோ அழகு மேடம் என கூறி வருகிறார்கள்.