திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!
PMK – BJP : தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தேர்தலுக்கு தயாராக இருக்கிறது.
Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…
ஆனால், அதிமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஒருபடி மேல சென்ற பாஜக இந்த முறை தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. அதாவது, பாமக, தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது.
அதேசமயம், பாஜகவும் அந்த இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால், பாமகவும், தேமுதிகவும் யார் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. இந்த சூழலில், பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக பாஜகவுடன் பாமக கைகோர்த்தது. அதிமுகவுடன் சமீப நாட்களாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, பாஜக கூட்டணியில் இணைந்தது.
Read More – மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டிவனம் அடுத்து தைலாபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, வரும் தேர்தலில் பாஜவுடனான கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், எந்தந்த தொகுதிகள் என்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இருப்பினும், தருமபுரி, கடலூர், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம், மத்திய சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியை பாமக எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More – மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!
எனவே, கூட்டணி ஒப்பந்தமானத்துக்கு பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, பாமக 10 ஆண்டு காலமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. நாட்டின் நலன் கருதியே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தார். இதுபோன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, என்டிஏ கூட்டணியில் பாமக 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி இந்திய அளவில் வலு சேர்க்கும் என்றும் தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.