IPL 2024 : தொடரும் சோகம் ..! சி.எஸ்.கே அணிக்கு 3-வது இடி !
IPL 2024 : ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் போட்டிக்கான டிக்கெட் எடுக்கும் முனைப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு மிகம்பெறும் எதிர்ப்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது
Read More : – IPL 2024 : சி.எஸ்.கே-ஆர்.சி.பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது ! டிக்கெட் விலை எவ்ளோனு தெரியுமா ?
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி மிகவும் வலுவாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு கொண்டே வருகிறது. முதலில் நியூஸிலாந்து அணியை சேர்ந்த டேவன் கான்வேக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது.
Read More :- IPL 2024 : ஒரே அணியில் ரெண்டு மலிங்கா ? ஐபிஎல்லில் மிரட்ட போகும் சிஎஸ்கே !
அதை தொடர்ந்து சென்னை அணியின் ‘குட்டி மலிங்கா’ என அழைக்கப்படும் மதீஷா பத்திரனாவிற்கு காலில் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இவர் சென்னை அணியின் நட்சத்திர பவுளராக சென்ற வருடம் திகழ்ந்தார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து வங்கதேச அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.
Read More :- TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !
இலங்கை உடனான சுற்று பயணத்தொடரின் 3-வது ஒரு நாள் போட்டியில் பந்து வீசும் பொழுது இடது காலில் தசை பிடிப்பு காரணமாக அவர் அந்த போட்டி நடைபெறும் பொழுதே ‘ஸ்ட்ரெட்ச்சரில்’ படுக்க வைத்து கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த காயத்தின் தீவிரம் என்னவென்று இன்னும் தெரியவில்லை அதை பொறுத்தே அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என்று தெரியும். இந்த நிகழ்வானது சிஎஸ்கே அணி ரசிகர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் வருகிற முதல் ஐபிஎல் போட்டியில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவர் என நம்பிக்கையோடு உள்ளனர்.