mamitha BAIJU

Cinema

சக்சஸ் மீட்டில் கவனம் ஈர்த்த ‘பிரேமலு’ நாயகி.! வைரலாகும் போட்டோஸ்…

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படத்தின் தெலுங்கு டப்பிங் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,அதற்கான சக்சஸ் மீட் (12.03.2024) ஹைதராபாத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தை வெகுவாகப் பாராட்டினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னணி நடிகர்களான நஸ்லென்,மமிதா பைஜு,சங்கீத் பிரதாப் மற்றும் ஷியாம் மோகன் ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட படத்தின் நாயகி மமிதா பைஜுவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள் இவர் தான் தன்னுடைய ரிஸன்ட் க்ரஸ் என பதிவிட்டு வருகிறார்கள்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு தமிழகத்தில் எவ்வாறு வரவேற்பு கிடைத்ததோ அதுபோல், பிரேமலு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி,தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றிய நிலையில்,டப்பிங் பணிகள் முடிந்து(மார்ச் 15ம் தேதி) திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!