இனி LLR எடுப்பது மிக சுலபம்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.!
LLR : புதியதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவார்கள் முதலில் வாகன ஓட்ட பழகுநர் உரிமம் பெற வேண்டும் . அதனை அப்ளை செய்து அடுத்த 30 நாட்கள் கழித்து ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாகனத்தை இயக்கி காண்பித்து வாங்கி கொள்ளலாம். இந்த LLR எனப்படும் பழகுநர் உரிமம் 6 மாத காலம் வரையில் செல்லுபடியாகும்.
Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை உயர்வு!
முதலில் இந்த LLR எனப்படும் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ ஆபிஸ் வரை நேரடியாக சென்று அதற்கான தேர்வை அங்கு வைத்து எழுத வேண்டிய சூழல் வரும். அதனை அடுத்து கடந்த ஆண்டு தமிழக அரசு அதனை எளிதாக்க ஒரு நடைமுறையை கொண்டு வந்தது.
அதன்படி, ஆன்லைன் மூலமும் அதனை விண்ணப்பிக்கலாம் என்று கூறி, Parivahan இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். அப்படியான சூழலில் தற்போது அதனை மேலும் எளிதாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Read More – ஜப்பானிய தொழில்நுட்பம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்.! அசத்தும் Komaki Ranger.!
தமிழகத்தில் இருக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மையத்தில் பழகுநர் உரிமத்திற்கு பயனர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு ஏற்கனவே இருக்கும், பழகுநர் உரிமத்தின் கட்டணத்தை விட கூடுதலாக 60 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த கோரியுள்ளது.