ஐபிஎஸ் அதிகாரியை காலிஸ்தானி என்று அழைத்தது யார்..? பாஜக மறுப்பு..!

Khalistani

மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பாஜக  பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தேஷ்காலி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கிற்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி உடன் வந்திருந்த பாஜக ஆதரவாளர்களில் யாரோ ஒருவர் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கை காலிஸ்தானி என அழைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக ஆதரவாளர்களுடன் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ” நான் தலைப்பாகை அணிந்திருப்பதால், நீங்கள் என்னை காலிஸ்தானி என்று சொல்கிறீர்களா..? நீங்கள் கற்றுக்கொண்டது இதுதானா..? ஒரு போலீஸ் அதிகாரி தலைப்பாகை அணிந்து நேர்மையாக தனது கடமையை செய்தால், அவர் உங்களுக்கு காலிஸ்தானியாக மாறுவாரா..? நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

‘நான் எனது வேலையை மட்டும் செய்து வருகிறேன். உங்கள் மதத்தைப் பற்றி நான் ஏதாவது சொன்னேனா..? என் மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறாய்.? என கோவமாக பேசினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மேற்கு வங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இன்று, பாஜகவின் பிரித்தாளும் அரசியல் சட்ட வரம்புகளை வெட்கமின்றி மீறியுள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை தலைப்பாகை அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானிகள்.

அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் இந்த துணிச்சலான முயற்சியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வங்காளத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம், அதை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று கூறினார்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில் “யாரும் யாரையும் காலிஸ்தானி என கூறவில்லை.மேற்குவங்க காவல்துறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கைகூலி, சந்தேஷ்காலியின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்திவிட்டு ஷாஜஹான் ஷேக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேற்குவங்க காவல்துறை அரசியலில் கவனம் செலுத்தாமல், காவல்துறையில் கவனம் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்