18 MLAக்கள் தகுதி நீக்கவழக்கு..!!செப்.5 தீர்ப்பு..!!சூடுபிடிக்க போகும் தமிழக அரசியல்..!!

Default Image

18 MLAக்கள் தகுதி நீக்கவழக்கில் மூன்றாவது நீதியரசர் அளிக்கும் தீர்ப்பு நாளை மறுநாள் செப்டம்பர் 5 ந் தேதி புதன்கிழமை வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related image

இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. கொறடா சபாநாயகருக்கு சிபாரிசு செய்தார். இதை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

Image result for JUDGEMENT 18 MLA

இதனிடையே 18 எம்.எல்.ஏ.க்களும் மீதுள்ள இந்த வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு 18  எம்.எல்.ஏ.களுக்கும் சாதகமாக வரும் பட்சத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் மேலும் தமிழக அரசியலில் இந்த தீர்ப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்