கேரளாவும் தமிழகமும் இணைந்தால் மாஸ் தான் சமூக வலைதளத்தில் ட்ரென்ட் ஆகும் புதிய கருத்து .!!
நீயும் நானும் சேர்ந்தா மாஸ் டா.. தமிழகத்துடன் ஒற்றுமை கொண்டாடும் கேரளா
கேரளா: தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள கருத்து மோதலை கைவிடும்படி பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தமிழகத்தினர் செய்து வருகின்றனர்.இதனால் பலரின் பாராட்டுக்களையும் தமிழகமும் , தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் பெறுகின்றது..
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கேரளா மற்றும் தமிழக இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்களின் மூலம் தமிழகம், கேரள மக்களிடையே வார்த்தை மோதல் நிலையில் இரு மாநில மக்களின் சகோதரத்துவத்தை கெடுக்கும் வகையிலான மீம்ஸ்களும், வீடியோக்களையும் பலர் பதிவிடுகின்றனர்…
இதை அறிந்த கேரள மாநில காவல்துறை அதிகாரிகள் இப்படி யாரும் பகைமையை ஏற்படுத்த வேண்டாம் என கேரள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்…
மேலும் கேரள மக்களுக்கு கேரள போலீசார் கூறியதாவது ,
கேரளா மழை வெள்ளத்தில் மிதந்த கேரளாவுக்கு வண்டி, வண்டியாக ஓயாமல் தமிழக மக்களும் , இளைஞர்களும் , மாணவர்களும் தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்து நம்மை மீட்டனர். இதற்கு தமிழகர்களின் சகோதர உணர்வை பாராட்டி கேரள முதலமைச்சர் பதிவிட்டார் என்றும், பதிலுக்கு தமிழர்களும் பதில் வீடியோக்களை போட்டனர்
இதையடுத்து சமூக வலைதளத்தில் ,
#KeralaLovesTamilNadu,
#வந்தாரை_வாழ_வைக்கும்_தமிழ்_நாடு,
#TogetherWeShallOvercome,
#WeLoveTamilNadu
போன்ற ஹேஸ்டேக்குகளும் சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகின்றது.
இந்த நிலையில்,தமிழகம் , கேரளம் இடையேயான சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரோதிகள் எனக் கூறியும், திட்டியும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டனர். இதற்கு கோபமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பதிலுக்கு வீடியோக்கள் மூலமாகவும், கமெண்டுகள் மூலமாகவும் சண்டையிட்டனர்.இந்த வார்த்தைப்போர் தன தற்போது நடந்து கொண்டு வருகின்றது.
எனவே, சமூக வலைதளங்களில் ஒருசிலரின் தனிப்பட்ட பிரச்சனைகளால், இரு மாநிலங்களிடையே பகைமையை உருவாக்க வேண்டாம் என கேரளாவைச் சேர்ந்த பல பிரபலங்கள்
எம்எல்ஏ க்கள் ,
எம்.பி க்கள் ,
நடிகர்கள் ,
பத்திரிக்கையாளர்கள் ,
விடி பல்ராம்,
இதேபோல, போலீசாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
DINASUVADU