ஓஹோ.. இதனால்தான் மொட்டை அடித்து காது குத்துகிறோமா?

Head shaving

அறிவியல் ரீதியாகவும் வழிபாட்டு ரீதியாகவும் ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் மொட்டை அடித்து காது குத்த வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. இது பற்றி அடுத்த தலைமுறையினர்  நம்மிடம் கேட்டால் நாம் பதில் சொல்ல தெரிய வேண்டும் அல்லவா… அது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம் .

மொட்டை அடித்து காது குத்துதல் ஒவ்வொரு குடும்பத்திலும் மாறுபடும் .ஒரு சிலர் குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் செய்வார்கள் அல்லது ஒன்பது மாதத்தில் செய்வார்கள் இப்படி ஒவ்வொரு குல வழக்கப் படியும் இது மாறுபடலாம். ஆனால் இதை அனைவருமே செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உச்சிக்குழி மறைவது சற்று தாமதமாகும் கிட்டத்தட்ட 8- 9மாதங்கள் வரை ஆகும் அதன் பிறகு தான் குழந்தையின் மண்டை ஓடு ஸ்ட்ராங்கான பிறகு தான் மொட்டை அடிக்க வேண்டும்.

மொட்டை அடிப்பது ஏன்?

தாயின் கருவறையில் ஒரு குழந்தை உண்டான பிறகு அதில் உள்ள திரவத்தில் தான் முழு வளர்ச்சியையும் பெறுகிறது அப்போது அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்கும் அந்த கழிவுகளுக்குள்ளே தான் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு உடலில் உள்ள கழிவுகள் மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது ஆனால் தலையில் படிந்த கழிவுகளை வெளியேற்ற நிச்சயம் அந்த பழைய முடிகளை நீக்க வேண்டும் இதன் காரணமாகத்தான் மொட்டை அடிக்கப்படுகிறது, அது மட்டுமல்லாமல் மொட்டை அடித்த பிறகு முடியின் வேர் கால்கள் வழியாக விட்டமின் டி சத்து நேரடியாக மூளைக்கு சென்றடைகிறது இதனால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

காது குத்துவது எதற்காக தெரியுமா?

இந்த பூமிக்கு நாம் வந்து விட்டோம் அதனால் ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும், நம் காது  ஓம் என்ற வடிவில் இருக்கும் அதற்கு புள்ளி வைத்தால் தான் அது முழுமை பெறும் என்பதற்காகவும் காது குத்தப்படுகிறது இது ஓம்காரத்தின் வெளிப்பாடாகும் .அதனால்தான் காதை இழுத்தால் ஆணவம் குறையும் என்று ஆசிரியர்கள் காதை இழுப்பார்கள் தோப்புக்கரணம் போடச் சொல்லுவார்கள். இதனால் மூளையுல்  நரம்பு தூண்டப்பட்டு நல்ல ஞாபக சக்தியை கொடுக்கும் அது மட்டுமல்லாமல் நல்ல ஜீரண மண்டலத்தையும் உருவாக்கும். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்த பிறகுதான் மற்ற உணவுகளை கொடுக்கிறோம் இதற்கு நல்ல ஜீரண மண்டலம் வேண்டுமல்லவா… நம் காதுகளுக்கும் வயிறுக்கு  நிறைய தொடர்பு உள்ளது ,உச்சம் தலை முதல் உள்ளங்  கால் வரை அனைத்து நரம்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான்.

காது குத்தப்படாத உடல் எரிப்பதற்கு தகுதியற்ற பிணம் எனக் கூறுவார்கள். ஒருவேளை ஒருவருக்கு இறுதிவரை  காது குத்தவில்லை என்றால் சுடுகாட்டில் வைத்தாவது காது குத்தி தான் எரிப்பார்கள்.
ஆகவே ஒரு குழந்தையின் உள்ளமும் உடலும் வளர்ச்சியும் சீராக இருக்க வேண்டும். முதியோர் சொல் எல்லாமே முது நெல்லிக்கனி போல் என்பதற்கு ஏற்ப அவர்கள் கூறியவற்றை நாம் தட்டாமல் கடைபிடித்தால் அதன் இனிமை நமக்கு புரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்