Cinema
கேப்டன்
விஜயகாந்த்
நினைவுகள்.....
1952 - 2023
மதுரை, திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
1979இல் இனிக்கும் இளமை படத்தில் வில்லன். 1980இல் தூரத்து இடிமுழக்கம் படத்தில் ஹீரோவானார் விஜயகாந்த்.
100வது வெற்றிப்படமான கேப்டன் பிரபாகரனுக்கு பிறகு 'கேப்டன் விஜயகாந்த்' என அழைக்கப்படுகிறார்.
1984ஆம் ஆண்டில் மட்டும், ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
1999இல் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் சங்க கடன்களை அடைத்தார்.
சங்க தலைவராக இருந்தபோது நலிவடைந்த கலைஞர்களுக்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2005இல் தேமுதிக கட்சியை தொடங்கி 2006இல் சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொண்டார்.
2011 சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.
விஜயகாந்த் உடல்நல குறைவுக்கு பின்னர் 2016 மற்றும் 2021இல் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட தேமுதிக வெற்றிபெறவில்லை.
நவம்பர் 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அதன் பிறகு டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிசம்பர் 28, காலையில் சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Thanks For Watching
More Stories
தொடக்கம்
https://www.dinasuvadu.com/web-stories/