எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!

x app

பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார்.

அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம்  செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க்  அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எலான் மஸ்க் ” எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அரசாங்கம் ஒப்புதல் தந்தவுடன் எங்களுடைய எக்ஸ் தளத்தின் மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

சரியாக சொல்லவேண்டும் என்றால் அடுத்த ஆண்டு (2024) அரசு ஒப்புதல் கொடுக்கும் எனவே, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து பயனர்கள் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்த் கொள்ளலாம்” என கூறியுள்ளார். வழக்கமாக மக்கள் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, அந்த பண பரிமாற்றம் தற்போது எக்ஸ் தளத்திலேயே கொண்டுவரவுள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்