முகப்பருக்களை விரட்டியடிக்க…!!! சூப்பர் டிப்ஸ்..!!!
முகப்பருவை போக்க ஏராளமானோர், எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். குறிப்பாக முகப்பரு எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் வரும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலே, பருக்கள் வந்துவிடும்.
கணவாய் எலும்பை எடுத்துக்கொண்டு, ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து தேய்த்து கிடைக்கும் பேஸ்ட்டை முகப்பரு மீது வைத்து, உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு வரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆப்பிளை துருவி, சிறிது தென் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.
பாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த பேஸ்த்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால் சீக்கிரம் போய்விடும்.