தூத்துக்குடி பூங்காக்களில் விரைவில் அமைகிறது உடற்பயிற்சி நிலையம்
தூத்துக்குடி பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அமைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.
பொலிவுறு நகரம் என்னும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டமும் தேர்வு செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் உள்ள வசதிகளை போல தூத்துக்குடியிலும் உடற்பயிற்சி நிலையம் அமைக்க போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சாலை வசதி, குடிநீர் வசதி, சுவர்களில் வண்ண ஓவியம் வரைதல் , பள்ளியை நவீனமயமாக்குதல் என பலகட்ட பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிற்து.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா,எம்.ஜி.ஆர் பூங்கா போன்ற பூங்காக்களில் வெளிநாடுகளுக்கு இணையாக திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.