இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

மலையக தமிழர் விழாவில் பங்கேற்க இலங்கை செல்ல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இலங்கை மலையக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை புறக்கணிக்கப்பட்டது குறித்து அமைச்சர் கூறுகையில், இலங்கையில் மலையக தமிழர் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நான் பங்கேற்க இருந்தேன்.
அதாவது, மலையக தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக நான் பங்கேற்க இருந்தேன். மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் எனது பயண ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டேன். மத்திய அரசிடம் இருந்து அனுமதி முந்தைய நாள் இரவு வரை கிடைக்கவில்லை. நவம்பர் 2ம் தேதி விழாவுக்கு நவம்பர் 1ம் தேதி இரவு 9.30 மணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
என்னுடைய பயணத்தை ரத்து செய்த நிலையில், மத்திய அரசிடம் அனுமதி கிடைத்தது. மத்திய அரசு அனுமதி வழங்க தாமதித்ததால் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து விட்டேன். இலங்கையில் உள்ள விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் வாழ்த்து செய்தி அனுப்பினார் முதலமைச்சர். ஆனால், முதலமைச்சர் வாழ்த்து செய்தி ஒளிபரப்ப செய்யாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை.
2ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் முதல்வரின் வாழ்த்து செய்தியும் அனுப்பு வைக்கப்பட்டது. எந்த காரணத்தாலோ முதல்வரின் வாழ்த்து செய்தி மலையக தமிழர் விழாவில் ஒளிபரப்படவில்லை. இலங்கை மலையக தமிழர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை புறக்கணிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024