அமெரிக்காவில் சர்கார் ஷூட்டிங் ..!வீடியோவை வெளியிட்ட நடிகை ..!
நடிகை வரலட்சுமி சர்கார் ஷூட்டிங் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.
சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.
சர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் படக்குழு பாடல் காட்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளது.அங்கு சென்ற நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் படபிடிப்பிற்க்கு மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்,அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
https://twitter.com/varusarath/status/1026253683594424321
https://twitter.com/varusarath/status/1026253683594424321