Cauvery Issue : காவிரி தண்ணீர் கேட்டு கோரிக்கை! நாளை டெல்லி செல்லும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு!

Cauvery

கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு  உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது.

இதனையடுத்து, கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த நாள், பெங்களூரூவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு  மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளனர். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழுவும் டெல்லிக்கு பயணம் செய்கிறது. அங்கு சென்று, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட  கோரி வலியுறுத்தவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Cyclone Fingel - Rescue Team
TN Alerts
TN fisherman alert
Power Outage
Tamil Nadu Weatherman
puducherry govt
rain TN