காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு…வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!

கடந்த சில நாட்களாகவே காவல் நிலையங்களில் சில நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கர்ப்பிணியான பெண் காவலர் ஒருவருக்கு சக காவலர்கள் இணைந்து காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
பெரிய குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பாரதி என்ற பெண் காவலருக்கு துணை கண்காணிப்பாளர் கீதா என்பவருடைய தலைமையில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. பாரதி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு அருண் என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் சக பெண் காவலருக்கு
காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்திய காவல்துறையினர்… pic.twitter.com/GXFQcAGGxZ
— RAMJI (@RAMJIupdates) April 7, 2023
மேலும், இதைப்போல கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வாழப்பாடி அருகே கம்மாளப்பட்டி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வந்த மோகனா என்பவருக்கு காவல் நிலையத்திலேயே காவல் துறையினர் எல்லாரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024