கர்நாடகாவில் ம.ஜ.த சார்பில் 12 பேரும், காங்கிரஸ் சார்பில் 22 பேரும் அமைச்சர்களாக வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு ..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு குறித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்து, முதலமைச்சராக குமாரசாமி கடந்த மாதம் 23-ஆம் தேதி பதவி ஏற்றார். ஆனாலும் அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிதி, பொதுப்பணி, மின்சாரம், போக்குவரத்து, கல்வி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 12 இலாகாகளும், காங்கிரசுக்கு உள்துறை, விவசாயம், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட 22 இலாகாகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 12 பேரும், காங்கிரஸ் சார்பில் 22 பேரும் அமைச்சர்களாக வருகிற 6-ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்றும் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்