BREAKING NEWS:தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குபதிவு!

தூத்துக்குடி போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்செந்தூர் பொது விநியோகத்துறை அதிகாரி கோபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் ஆகியோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்பாக்கம் காவல் சரகம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 144 தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024