பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.! இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.!

Default Image

வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், இபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமியை  அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Annamalai-eps

அதே போல, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வவத்தையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்புகள் தொடர்பாக இன்று இபிஎஸ் தரப்பு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

annamalai - ops

அவர் கூறுகையில், வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அது னைவருக்கும் தெரியும். பாஜகவினர் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த நட்பு கட்சிகளின் ஆட்சிகள் எப்படி கவிழ்ந்தது. பிறகு பாஜகவினர் எப்படி ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

அடுத்து பாஜக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக எங்கள் கூட்டணியில் இல்லை. தனித்தே போட்டியிட்டனர். திமுகவை தவிர எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் நாங்கள் வரவேற்க்க தயாராக இருக்கிறோம். எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்