காட்டு யானையுடன் சண்டைபோடும் ஜிவி..மிரட்டும் ‘கள்வன்’ டீசர் இதோ….!

நடிகராகவும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கள்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்த இவானா நடித்து வருகிறார்.
மேலும் படத்தில் பாரதி ராஜா, தீனா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்து வருகிறார். படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க, TN சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது.
படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் ஒரு கிராமத்தில் ஜிவி பிரகாஷ் வாழ்கிறார். அந்த கிராமத்திற்குள் யானைகள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்கிவிட்டு செல்கிறது. இறுதியில் யானையுடன் ஜிவி பிரகாஷ் நேருக்கு நேராக மோதுவது போல் காட்டப்பட்டுள்ளது.
டீசரை பார்க்கையில் கண்டிப்பாக படம் வித்தியாசமான கதைகளை கொண்டு உருவாகி உள்ளது என்பதை உணர்த்திக்கிறது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s the teaser of #Kalvan Wishing you all happiness! @gvprakash Best wishes Team!
— Suriya Sivakumar (@Suriya_offl) January 13, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024