அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடித்ததற்காக ராம் சரண் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்- பீஸ்ட் இங்கே.. வலிமை எங்கே.? முன் பதிவில் மாஸ் காட்டிய டாப் 5 லிஸ்ட் இதோ…!

அதன்படி, இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ராம் சரண் 90 கோடியிலிருந்து, 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். இதற்கு முன்பு குறைவாக சம்பளம் வாங்கி வந்த ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024