பட்டையை கிளப்பும் வசூல்…லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பாபா.!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி தோல்வியடைந்த பாபா திரைப்படம் இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. மறு படத்தொகுப்பு, கலர் கிரேடிங், ரீமிக்ஸ் போன்றவையை மெருகேற்றி படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் மெருகேற்றப்பட்டு தற்போது படம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் ரசிகர்களுக்கு சரியான ட்வீஸ்ட் என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன்- 2022 டாப் ட்ரெண்டிங் இது தான்… ஆடாத கால்களையும் ஆட்டம் போட வைத்த அட்டகாச ஹிட் லிஸ்ட்..!
இந்நிலையில், ரீ-ரிலீசான பாபா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் சுமார் 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் புதிய வெளியீடுகளுக்கு இணையாக நல்ல வசூல் செய்ததுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.