கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இவர்கள் செய்தித்தாள்களையும் ஊடகங்களையும் தினசரி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழகம் முதல்வர் வழங்கியுள்ளார். கரூரில் இன்று மட்டும் ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.