அதிமுக அலுவலக கலவர வழக்கு.! ஓபிஎஸ் ஆதரவாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் திடீர் ஆஜர்.!

ஜூலை 11இல் அதிமுக அலுவலகம் ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகம் மற்றும் பொது சொத்துக்கள் சேதமடைந்தன.
இந்த கலவரம் தொடர்பாக, இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் ஆதரவாளர் கொடுத்த புகார் உட்பட 4 புகார்கள் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி வசம் சென்றது.
அவர்கள் இந்த விசாரணையை அதிமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கினர். இன்று சி.வி.சண்முகத்திடம் மறுவிசாரணை செய்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.
தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பிலும் மாறி மாறி புகார்கள் வந்துள்ளதால் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024