தங்கத்தின் விலை வீழ்ச்சி – சவரனுக்கு மேலும் ரூ.432 குறைவு
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் ரூ. 54 குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ. 432 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனையாகிறது. அதன்படி வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.60-க்கும், ஒரு சவரன் ரூ.492.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.